சென்னை, நடிகர் நெப்போலியன் நடிப்பினும் அரசியலும் புகழின் உச்சத்தில் இருந்தார். இருப்பினும் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அவருடைய மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டனர். சமீபத்தில் நெப்போலியன் சம்மந்தி அதாவது மருமகள் அக்ஷயாவின் பெற்றோர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர். இணையதளத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அக்ஷயாவின் தாயார் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன் மும்பையில் படித்ததால் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகள் எனக்கு தெரியும் என்று கூறினார். நாங்கள் திருமணத்தின் போது அழுதது ஆனந்த கண்ணீர். எங்களிடம் சம்மந்தி நெப்போலியன் வீட்டில் இருக்கும் அனைவருமே அன்பாக பழகுகிறார்கள். எங்களுடைய பொண்ணை நெப்போலியன் அவர்களின் வீட்டிற்கும் திருமணம் செய்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். நல்ல குடும்பத்தில் எங்களுடைய பொண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளோம்.
