சென்னையில் அதிகமாக பரவி வரும் காய்ச்சல்… தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு …!!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிவது நல்லது. மேலும் சென்னையில் பரவி வருவது புதிய வகை வைரஸ் தொற்று அல்ல என்று பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே பரவி வருகிறது. புதிய வகை தொற்று எதுவும் இல்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு, இன்புளுயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில், டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, உரிய சிகிச்சை பெற வேண்டும்” என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.