புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைத்துள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த், யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, இது முற்றிலும் தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜய் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் புதுச்சேரி பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
