Categories: சினிமா

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்த கமலஹாசன்… இத்தனை Variety-ஆ..? வைரலாகும் புகைப்படங்கள்..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிவடைந்தது. இதில் மொத்தம் 23 போட்டியாளர்கள் களமறக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் வைல்ட் கார்டு மூலம் களமிறங்கியவர்கள். பாவா செல்லதுரை ,சரவண விக்ரம், மணி,  மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, ஜோவிகா, விஷ்ணு, விஜய் வர்மா, பூர்ணிமா, அக்ஷயா உட்பட 18 போட்டியாளர்களும்,

அர்ச்சனா, கானா பாலா ,தினேஷ், ஆர் ஜே பிராவோ, அன்னபாரதி என ஐந்து வைல்ட் கார்டு  போட்டியாளர்களும் இந்த பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். ஆரம்பத்திலிருந்தே சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நடந்த மிகப்பெரிய கலவரமே  பிரதீப் ரெட் கார்ட் விவகாரம் தான்.

பல்வேறு  சண்டை, அழுகை,  கோபம் என அனைத்தையும் பார்த்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி 14-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ் , விஷ்ணு என 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் முதன்முறையாக பிக் பாஸ் வரலாற்றிலேயே வைல்ட் கார்டு போட்டியாளரான அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

இரண்டாவது இடத்தை போட்டியாளர் மணி பிடிக்க, மாயா, தினேஷ், விஷ்ணு அடுத்தடுத்து இடங்களை பிடித்தனர். இந்த சீசனை பொருத்தவரையில் போட்டியாளர்கள் அதிகம் மக்களை எண்டெர்டைன் செய்ததை விட அவர்களை மன அழுத்தத்திற்காக உள்ளாக்கியதாகவே நெட்டிசன்கள் கமெண்ட்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் முடிந்தவுடன் முடிவடைந்த உடன் எப்பொழுதும் போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் டீமிற்க்கும் கமலஹாசன் விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் பிக் பாஸ் முடிந்த கையோடு ஒட்டுமொத்த டீமிற்க்கும் பிரம்மாண்டமான மதிய உணவை ஏற்பட செய்திருந்தார் கமலஹாசன்.

இந்த விருந்தில் மொத்த போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் செட் அமைக்கப்பட்ட ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தான் இந்த மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த விருந்தில் சுமார் 43 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. அதில், ‘கீரனூர் மட்டன், தம் பிரியாணி, மட்டன் குழம்பு, நெத்திலி மீன் குழம்பு,

தென்னங்குருத்து பொரியல், நாகர்கோவில் அவியல், புதினா சாஸ், வெஜ் ஆம்லெட், பெரி பெரி சிக்கன், மட்டன் சுக்கா, இறால் தொக்கு, கடாய் சிக்கன் குழம்பு, ஆட்டுக் கோழி ரசம் என  பல்வேறு உணவு வகைகள்பரிமாறப்பட்டு இருந்தது  குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

7 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

7 மணத்தியாலங்கள் ago