#image_title
தை திங்கள் முதல்நாளை தமிழர் திருநாளாக தமிழ் மக்களால் சூரியனுக்கு நன்றி கூறும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். இத்திருநாளில் திரை பிரபலங்கள் நண்பர்களுடனும் மற்றும் குடும்பத்தினருடனும் பொங்கல் விழாவை கொண்டாடி இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதில் நடிகை மீனா பொங்கல் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை மீனா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு உள்ளது.
நடிகை மீனா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திரைப்படங்களில் நடித்து வந்த மீனா டாக்டர் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்தக் குழந்தையும் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் நடித்துள்ளார் .
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காத மீனா, நீண்ட காலம் கழித்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது பிரதமர் மோடி கலந்து கொண்ட பொங்கல் விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்ட புகைப்படத்தை Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில், என்னால் மறக்க முடியாத பொங்கல் விழா என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 341 ஏக்கர் வனப் நிலத்தை மீட்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது…
குஜராத் மாநிலம் மோர்பியில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு பெண் வழக்கறிஞரின் காரை அண்டை வீட்டுக்காரர்…
மகாராஷ்டிராவில் உள்ள விரார் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…
ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…