Categories: சினிமா

அவங்களோட பயோ பிக்கில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டேன்.. ஆனா அது ஒன்னு தான் குறையா இருந்துச்சு.. மனம் திறந்த கமல்ஹாசன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனியொருப்  பல்கலைக்கழகமாக விளங்குபவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம். தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இதனிடையே சுமார் நான்கு வருடங்கள் நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் மூலம் சினிமாவில் எது என்று கொடுத்து தன்னை மீண்டும் ஒரு நடிகராக நிரூபித்து காட்டினார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் அபிராமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய நிலையில் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு வசூல் வேட்டை நடத்திய படமாகவும் விக்ரம் திரைப்படம் மாறியது. அந்த படத்திற்குப் பிறகு இளம் இயக்குனர்களுடன் கமல்ஹாசன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய நண்பர்களுடன் மீண்டும் அவர் கைகோர்த்து வருகின்றார். சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தங்களைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படியான நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நீங்க யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசைப்பட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், சுபாஷ் சந்திர போஸ் எனக்கு குரு மாதிரி. அவர் பயோ பிக்கில் நடிப்பதற்கு நானும் ஆடிஷன் சென்று இருந்தேன். அப்போ டைரக்டர் வேறு ஒருத்தரை தேர்வு செய்துவிட்டு உங்களுக்கும் அவருக்கும் உயரம் பிரச்சனையாக இருக்கும் என்று கூற நானும் சரியான காரணம் என்று ஒப்புக்கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒருநாள் சுபாஷ் சந்திரபோஸ் வீட்டுக்கு சென்றிருந்தபோது அவருடைய டிரஸை பார்த்தபோது அவரும் நானும் ஒரே உயரம் என்று தெரிந்து கொண்டேன். அப்போதான் நம்பள வேண்டாம் என்று இப்படி சொல்லிட்டாங்களே என்று நினைத்து வருந்தினேன். அதனைப் போலவே சத்யராஜ் நடித்த பெரியார் வேடத்திலும் நான் நடிக்க விரும்பினேன். ஆனால் வயசான வேடம் என்பதால் வயசாகட்டும் என்று காத்திருந்தபோது அந்த வாய்ப்பும் போய்விட்டது. அவனைப் போலத்தான் மனோகர் சார் நடித்த ராவணன் வேடமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago