Categories: சினிமா

விஜய்யை வம்புக்கு இழுக்கும் அஜித்.. குட் பேட் அக்லி படத்தில் இப்படி ஒரு சம்பவம் காத்திருக்கா.. இதை யாருமே எதிர்பார்க்கலையே..?

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களை நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதித் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

படக்குழு தரப்பிலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பாடல்களிலும் விஜய் சீண்டும் பாடல் வரிகள் இடம் பெற்று இருந்தது. அதாவது ஓ ஜி சம்பவம் என பெயரிடப்பட்ட முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் என இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலில் துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்த ஆளா சம்பவம் டா என்ற வரி இடம்பெற்று இருந்தது. இந்த வரிகள் விஜயை சீண்டதான் வைக்கப்பட்டுள்ளது என இணையவாசிகள் பலரும் கூறி வந்தனர். காரணம் துப்பாக்கி என்பது விஜயின் படமாகும்.

அடுத்ததாக அனிருத் பாடியிருந்த பாடலில் துப்பாக்கி வெற்றி வரும் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்தியை உரசும் போது வரும் சத்தம் மெலடி பீட்டு என்ற வரிகள் விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி என இரண்டு படங்களையும் சீண்டுவதாக இருந்தது. இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்தில் விஜய் பேசும் டயலாக்கை அஜித் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது படத்தின் இடைவெளி காட்சியில் அஜித் விஜயின் டயலாக் பேசுகிறாராம். அதாவது “வாட் ப்ரோ, ஐ எம் பேக்”என அஜித் இந்த வசனத்தை பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டயலாக்கை மிகவும் மாசான இடைவெளி காட்சியில் அஜித் பேசுவதால் அஜித் ரசிகர்களுக்கு தரமான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே பாடல்கள் மூலமாக விஜயை சீண்டுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அஜித் விஜய்யின் டயலாக் பேசியும் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கிறாரா, விஜயை வம்புக்கு இழுக்கிறார் என்றால் அது விஜய் சினிமாவில் இருக்கும் போது இழுக்க வேண்டியது தானே, எதற்காக விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இப்படி பஞ்ச் டயலாக் பேசி வம்புக்கு இழுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago