Categories: சினிமா

தொடர் பிரச்சனைகளை சந்தித்த காதலிக்க நேரமில்லை படம்.. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியாகி வெற்றி விழா கண்டு சாதனை..!

Spread the love

நவீன தமிழ் சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சனா போன்ற பழம் பெரும் நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். கடந்த 1964 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் காதலிக்க நேரமில்லை பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

குறிப்பாக விஸ்வநாதன் வேலை வேணும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள், நாளம் நாளம் திருநாளாம் போன்ற பாடல்கள் காலத்திற்கும் பேசப்படும் பாடல்களாக அமைந்தன. இதில் அனுபவம் புதுமை என்ற பாடலில் ராஜ ஸ்ரீயின் அசத்தலான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தொடர்ந்து 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஆனால் படத்தின் இத்தனை சாதனைகளுக்கு முன்னாலும் பெரிய போராட்டத்தை இயக்குனர் ஸ்ரீதர் சந்தித்துள்ளார். அதாவது ஸ்ரீதர் படத்திற்கான கதையை எழுதி முதலில் பத்து நாட்கள் ஷூட்டிங் நடத்தியுள்ளார்.

பிறகு அந்த காட்சிகளை பார்த்த போது அவருக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை அப்படியே தூக்கி எறிந்து விட்டு மீண்டும் ஒரு புதிய கதையை எழுதி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அந்த கதை தான் பின்னாடி படமாக உருவானது. காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியான போது இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது இந்த திரைப்படம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுந்தது. அதாவது படத்தின் பெயரிலும் ஆபாசமுள்ளது அதனைப் போலவே படத்தில் உள்ள சில காட்சிகளிலும் ஆபாசம் இருப்பதால் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கலாமா என்று பல விவாதங்கள் எழுந்தது.

சட்டசபையில் ஒரு உறுப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பிய போது படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். என் பெயரிலும் படத்தில் உள்ள சில காட்சிகளிலும் கவர்ச்சி இருக்கிறதே தவிர ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஆபாசமில்லை என்று கூறி பலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பிறகு தமிழக முழுவதும் திரைப்படம் வெளியாகி ஓடிய நிலையில் சட்டசபையில் எழுந்த விவாதமும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது என்று சொல்லலாம். அந்த காலத்திலேயே இந்த திரைப்படம் வெள்ளி விழா கண்டது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

5 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

5 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

5 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago