பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தியன் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.

இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இப்போது வந்த தகவலின் அடிப்படையில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வியால் அப்செட்டில் உள்ளாராம். இதனால் தான் நடித்த ஒரு வெற்றிப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் இந்தியன் 3 திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறிவிட்டாராம். மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைப் திரைப்படம் நல்ல வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம் ராம் சரணை வைத்து சங்கர் கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. கேம் சேஞ்சர் படம் சூப்பர் ஹிட் ஆனால் அதே கையோடு இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்யலாம் என சங்கர் ஒருபுறம் யோசிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு கமல்ஹாசன் ஒத்துக் கொள்வாரா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் தயாரிப்பு நிறுவனத்தினர் யோசிப்பதை பொறுத்துதான் இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது தெரியவரும்.
