Connect with us

தலைக்கு தில்ல பாத்தியா.. எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்த கல்கி பட இயக்குனர்..!!

TRENDING

தலைக்கு தில்ல பாத்தியா.. எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்த கல்கி பட இயக்குனர்..!!

 

எல்லாம் மஸ்க் டெஸ்லாவின் தலைவர் ஆவார். டெஸ்லா சர்வதேச அளவிலான முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். கடந்த ஏப்ரல் மாதமே எலான் மஸ்க் இந்தியா வரவேண்டிய நிலை. ஆனால் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் மாபெரும் பட்ஜெட்டில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகிறது.

Kalki 2898 AD: 6 டன் கொண்ட புஜ்ஜி கார்.. எலான் மஸ்குக்கு அழைப்பு.. கல்கி  2898 AD இயக்குநர் நாக் அஸ்வின் செய்த சம்பவம்!-kalki 2898 ad director nag  ashwin invited elon musk to ...

   

இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக படம் உருவாகிறது. இந்த படத்தில் ராணா டகுபதி, கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபாஸின் பெயர் பைரவா என குறிப்பிட்டு பட குழுவினர் போஸ்டர் வெளியிட்டனர்.

Nag Ashwin Invites Elon Musk To Test Drive The 6 Ton Beast Bujji, The High  End Car From Kalki 2898 AD | Times Now

வருகிற ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தினர் படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ கேரக்டரான புஜ்ஜியின் டீசரை வெளியிட்டது. நடிகை கீர்த்தி சுரேஷ் புஜ்ஜுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கல்கி பட இயக்குனர் “டியர் எலான் மஸ்க் சார் எங்களது புஜ்ஜி எனும் வாகனத்தை நீங்கள் வந்து பார்த்து இயக்க வேண்டும்.

Nag Ashwin invites Tesla CEO Elon Musk to India to drive Prabhas car Bujji  from Kalki 2898 AD Amitabh Bachchan Deepika Padukone - India Today

நாங்கள் உங்களை அழைக்கிறோம். இது 6 டன் பீஸ்ட். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. முழுவதும் எலெக்ட்ரிக் இன்ஜினியரிங் உதவியால் உருவாக்கப்பட்டது. இது உங்களது சைபர் டிரக்குடன் சிறந்த புகைப்படமாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லுவேன். நாம் இருவரும் இணைந்து இதனை இயக்க வேண்டும் என நினைக்கிறேன் என சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top