Connect with us

50 வயது காதலியை விட்டு பிரிகிறாரா போனி கபூரின் மகன் அர்ஜுன்..? வெளியான செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

CINEMA

50 வயது காதலியை விட்டு பிரிகிறாரா போனி கபூரின் மகன் அர்ஜுன்..? வெளியான செய்தியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூர் தனது நீண்ட நாள் காதலியான மலைகா அரோராவை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மலைகா அரோரா. இவர் உயிரே படத்தில் ஷாருக்கானுடன் தக்க தைய தையா என்ற பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார். இவர் 1998 ஆம் ஆண்டு அர்பாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2017ல் அர்ஜுன் கபூர் உடன் ஆன காதல் காரணமாக அர்பாஸ்கான் விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு 20 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். அவரது பெயர் அர்ஹான் கான். இவர் அமெரிக்காவில் படிப்பு முடித்துவிட்டு தற்போது மும்பை திரும்பி தனது அம்மாவுடன் வசித்து வருகின்றார். நடிகர் அர்ஜுன் கபூர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் முதல் மனைவியின் மகன் ஆவார்.

   

அர்ஜுன் கபூரும் மலைகா அரோராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அர்ஜுன் கபூரை விட மலைகா அரோராக்கு 12 வயது வித்தியாசம் அதிகம். இவர்கள் காதலிக்க தொடங்கியது பிறகு பாலிவுட்டில் ஏகப்பட்ட ட்ரோல்கள் வெடித்தது. இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக பல வதந்திகள் வந்த நிலையில் தற்போது அவர்கள் உறுதியாகவே பிரிந்து விட்டதாகவும் இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகின்றது.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கபூரை மலைக்கா அரோரா காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் படு நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்களையும், பார்ட்டிக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர் 40 வயது கடந்த நிலையிலும், மலைகா அரோராவை காதலித்து வந்த அர்ஜுன் கபூர் தற்போது அவருக்கு 50 வயது கடந்ததால் கழட்டிவிட்டதாக பாடி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டார் மலைகா அரோரா அதில் விர்ஜினிட்டியை எப்போது இழந்த என்று படுமோசமான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். பதிலுக்கு மலைகா அரோராவை மடக்க உங்களுக்கு எப்போது இரண்டாவது திருமணம் என்று மகன் கேட்க இது படுமோசமான நிகழ்ச்சியாக மாறியது.

சமீபத்தில் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் இருவரும் சில மாதங்களாகவே சேர்ந்து இருக்கும் எந்த புகைப்படங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். அவரது நெருங்கி வட்டாரங்கள் பலரும் அவர்களுக்கு பிரேக்கப் ஆகிவிட்டது என்பதை உறுதி செய்து இருக்கின்றனர்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top