தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து முடிந்தது. கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோட் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிப்பதற்கு வெங்கட் பிரபு மைக் மோகனை அணுகியுள்ளார். அப்போது மைக் மோகன் தனக்கான சீன், டயலாக், கதைக்களத்தை தெளிவாக கேட்டாராம். ஒரு படத்தில் தனக்கான முக்கியத்துவம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மைக் மோகன் கவனமாக இருந்துள்ளார்.
கோட் படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் என அனைத்தையும் தெளிவாக கேட்டுவிட்டு அதன் பிறகு தான் படத்தில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டாராம். ஏற்கனவே லியோ திரைப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் மைக் மோகனை நடிக்க வைக்க லோகேஷ் நினைத்துளார். ஆனால் அதில் நடிக்க அவர் ஒத்துக் கொள்ளாததால் அதன் அந்த கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.