
CINEMA
என்ன அழகு…! ஹீரோயின் போல ஜொலிக்கும் சன் டிவி கலாநிதிமாறனின் மகள்…! இத்தனை நாளா இதை மறைச்சுடீங்களே…!
தமிழகம் மட்டும் இல்லது இன்று இந்தியா முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் என்றால் அது சன் தொலைக்காட்சி நிறுவனம்தான். இன்று இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட தொலைக்காட்சி வரிசையில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி.
சன் நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள், புது புது படங்கள் இவையெல்லாம் ஒரு காரணம்.
என்னதான் நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளும் இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம்.
திரு. கலாநிதிமாறனால் தொடங்கப்பட்ட சன் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பறந்து விரிந்துள்ளது. சன் நெட்வொர்கில் பல சேனல்கள் வரும் நிலையில் இந்தியா மட்டுமின்றி பிரித்தானியா, இலங்கை, கனடா உள்ளிட்ட 33 நாடுகளில் பார்க்க முடியும். 1991-ம் ஆ ண்டு மார்ச் 13 ஆம் தேதி சன் நெட்வொர்க் தொடங்கப்பட்டது.
கலாநிதி மாறன் 1965 ம் ஆ ண்டில், தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மிக முக்கியமான வாரிசு. இவருடைய தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர், திரு முரசொலி மாறன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவருடைய தலைமையின் கீழ் சன் நெட்வொர்க் நிறுவனம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வளமான காலத்தை அனுபவித்து வருகின்றது.
1991ல், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார்.
இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ல் பிறந்தது. காவ்யா சன் ரைசர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் காவ்யா சன் நெட்வொர்க் மற்றும் எஃப்எம் சேனலின் பொறுப்பாளராக உள்ளார்.
தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘கலாநிதி மாறன் மகளா இது? பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே என கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.