தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1990ல் வெளிவந்த படம் கிழக்கு வாசல், இந்த படத்தில் ஜனகராஜுக்கு சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டு வாழ்க்கையில் பிழைக்கும் கேரக்டர். அதில் உண்மையாகவே சாட்டையை வருது உடம்பில் அடித்தால் வடுவாக மாறிவிட்டதாம் அவருக்கு.
ரஜினி கமல் என இரண்டு பேரும் ஹீரோக்களுடனும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.மணிரத்னம் இயக்கிய அக்கினி நட்சத்திரம் படத்துல, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ என்று இவர் கூறும் அந்த டயலாக் இன்னும் பிரபலம் தான். தற்போது அவரை எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடிவதில்லை .செந்தில் கவுண்டமணி காம்போவாக கலக்கி கொண்டிருந்த காலகட்டத்தில் தனியாக காமெடியில் அசத்தியவர் ஜனகராஜ்.
காமெடி நடிகராக மட்டுமல்லாது மற்றொரு புறம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வந்த இவர் . ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடுவார். தற்பொழுது இவர் தனது மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இறுதியாக இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ஜனகராஜா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…