‘சிறகடிக்க ஆசை’ சீரியல் முத்துவா இது…? பாக்க செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே…! Unseen போட்டோஸ்…!

By Begam on செப்டம்பர் 28, 2023

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதிலும் முத்து செய்யும் சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

   

அதில் முத்து என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெற்றி வசந்த். இவருக்கென்று தற்பொழுது மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் வெற்றி வசந்த்தை ‘விஜய் சேதுபதி ‘ எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

   

 

இந்த சீரியலில் கதாநாயகன் முத்து, தண்ணி அடித்துக் கொண்டு திரியும் ஊதாரி நபராக இருக்கிறார். அப்போது அவருக்கு குடும்ப பாங்காக இருக்கும் மீனாவுடன் திருமணம் நடைபெறுகிறது. மீனாவுக்கு இந்த திருமணத்தில் சிறிதும் உடன்பாடு இல்லை.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கின்றனர். முத்துவின் தாயார் விஜயாவுக்கும் முத்து மற்றும் மீனாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் தனது மூத்த மகன் மனோஜ் மீதுதான் பாசம் காட்டுகிறார்.

அவருக்கு தனது இளைய மகன் முத்துவையும் அவரது மனைவியும் மீனவையும் சுத்தமாக பிடிப்பதில்லை. இந்த நிலையில்  மூத்த மகன் மனோஜ்க்கும் ரோகினிக்கும் விஜயா திருமணம் செய்து வைக்கிறார். இப்படி பல திருப்பங்களை கடந்து தற்பொழுது இந்த சீரியலில் முத்துவும் மீனாவும் சேர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கி விட்டனர்.

விஜயா வீட்டு பாத்திரத்தை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கியது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. இந்த வீட்டுப்பத்திரத்தை தற்பொழுது ரோகினி பணத்தை மொத்தமாக கொடுத்து மீட்டுக் கொடுத்துள்ளார். எப்பொழுது நேரம் கிடைக்கும் மீனாவை பழிவாங்கலாம் என விஜயாவும், ரோகிணியும் காத்திருக்கின்றனர்.

இப்படி விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் முத்து என்கிற முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் வசந்தின் பலரும் பார்த்திடாத சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.