மகளிர் உரிமைத்தொகைக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?… சற்றுமுன் தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 10 நாட்களில் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? இல்லையா என்று 45 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.