பயங்கர விபத்து: மின்னல் வேகத்தில் வந்த எஸ்யூவி கார்… கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதி சுழன்ற காட்சி… வைரலாகும் Shock வீடியோ..!!

By Soundarya on ஆடி 25, 2025

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு பயங்கர விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதாவது வேகமாக வந்த ஒரு எஸ்யூவி கார் ஒன்று நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி, பொம்மை கார் போல சாலையில் சுழன்றது. கான்பூர் தேஹாட்டில் உள்ள அக்பர்பூர் காவல் நிலையப் பகுதியின் கீழ் வரும் பரா டோல்கேட்டை கடந்த சிறிது நேரத்திலேயே, அதிவேக மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கொடூரமான விபத்து நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவனது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, ஸ்கார்பியோவின் பின்னால் வேறு எந்த வாகனமும் வேகமாக வரவில்லை. இந்த  விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று  கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த வாகனத்தை அகற்றி, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.