வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணத்திற்காகவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மமத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் , “த்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகள், 1972, மத்திய அரசு ஊழியருக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரை ஊதிய விடுப்பு, எட்டு நாட்கள் தற்செயல் விடுப்பு மற்றும் இரண்டு நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை ஆகியவற்றை வழங்குகிறது. மற்ற தகுதியான விடுப்புகளைத் தவிர, வயதான பெற்றோரைப் பராமரிப்பது உட்பட எந்தவொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இதைப் பெறலாம்” என்று கூறியுள்ளார்.
