மகன் இருக்கும்போதே மனைவியை படுக்கைக்கு அழைத்த கணவர்.. வர மறுத்ததால் கீழே தள்ளி தாலி கயிற்றால் செய்த கொடூர சம்பவம்…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவில் ரமேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், வினித் (24), விக்ரம் (22) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இப்படியான நிலையில் சம்பவத்தன்று இரவு மூத்த மகன் வினித் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மது அருந்திவிட்டு வாசலில் அமர்ந்திருந்த ரமேஷுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்று விட்டார். அப்போது வீட்டின் பின்பக்கமாக சென்ற ரமேஷ் தன்னுடைய மனைவியை படுக்கைக்கு வர அழைத்துள்ளார். அதற்கு மகன் சாப்பிடாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று செல்வி கூறியுள்ளார்.

ஆனாலும் ரமேஷ் தொடர்ந்து செல்வியை வற்புறுத்திய நிலையில் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரமேஷ் செல்வியை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் செல்வி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் செல்வி கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.