தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த முகாம் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் உரிமை தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி ஆகஸ்ட் 28ஆம் தேதி உடன் 45 நாட்கள் நிறைவடைவதால் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தகுதியானவர்களுக்கு பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்ற விவரத்தையும் அரசு விரைவில் வெளியிட உள்ளது.
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…