குடும்பத் தலைவிகளுக்கு ஷாக்… தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது… வெளியான அதிர்ச்சி தகவல்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த முகாமில் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இப்படியான நிலையில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி விடுபட்ட தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

   

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த முறை விடுபட்டவர்களும் புதிதாக ரேஷன் கார்டு பெற்றுள்ள தகுதியுள்ள பெண்களுக்கும் இந்த முறை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதனிடையே சில பெண்களுக்கு தகுதிகள் இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என சொல்லப்படுகிறது. அதாவது தமிழ்நாடு அரசு கொடுத்த காலகெடுவுக்குள் அதாவது ஜூலை மாதம் முதல் நவம்பர் மாத காலவரையறைக்குள் விண்ணப்பித்தவர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்து வருகின்றன. வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர தகுதியுடைய பெண்கள் மனு கொடுத்து வருகிறார்கள்.

   

அவர்களுடைய மனுக்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ள படாது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மனுக்கள் கொடுத்தாலே மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்ததற்கான அர்த்தம் என்பது இல்லை. எனவே இந்த மனுக்களை கொடுத்த பெண்கள் இந்த முறை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு நடவடிக்கை ஏதாவது எடுத்தால் மட்டுமே அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.