கர்நாடக மாநிலம் பெங்களூவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் சம்பளம் தரும் தன்னுடைய கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு டெலிவரி ஊழியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதற்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் என்ற உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார். இதற்காக தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகில் பகுதியில் எந்த வகையான உணவுக்கு தேவை உள்ளது? நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்க தயாராக இருக்கிறார்கள்? எந்தெந்த பகுதியில் ஆர்டர் அதிகமாக வருகிறது என்பதை கண்டுபிடிக்க விரும்பி தான் இந்த கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக வேலைக்கு சென்றுள்ளார்.
சில நண்பர்கள் அவரை கேலி செய்தார்கள். மேலும் டெலிவரி வேலையின் போது வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களையும் சந்தித்துள்ளார். இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும் அவர் பின்வாங்கவில்லை. தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம் குறைந்த விலையில் அதிக விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அடையாளம் கண்டுள்ளார். இந்த மாதிரி மூலமாக 3 முதல் 4 மாதங்களுக்குள் லாபம் பெற முடியும் என்று நம்பிக்கை அவருக்கு கிடைத்துள்ளதாம்.
