தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியல்களில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர் தான் ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில் அரசியலில் அவர் வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள்ளேயே பிரம்மிக்கத்தக்க எழுச்சியை பெற்று அசைக்க முடியாத ஒரு பெண் தலைவரானார். இதனிடையே ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மிகப்பெரிய தொண்டனும் தற்போதைய தமிழக வெற்றிக்கழகம் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் வெளியிட்டுள்ள பதிவில், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தவ வாழ்வு வாழ்ந்த அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும் பெரும் புகழையும் போற்றி வணங்குவேன் என்று அவர் கூறியுள்ளார். என்னதான் கட்சித்தாவினாலும் தனக்கு வழிகாட்டிய ஜெயலலிதாவை மறவாமல் செங்கோட்டையில் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/cHkE7oAjHU
— K.A Sengottaiyan (@KASengottaiyan) December 5, 2025
