செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை ரவுடி கும்பல் இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9-ம் தேதி நள்ளிரவில், தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளை அழைத்துக்கொண்டு கீழக்கண்டை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் மர்ம நபர்கள் இருவர் அவர்களைப் பின்தொடர, அச்சமடைந்த சிறுவன் வாகனத்தை வேகமாக ஓட்டியபோது அத்திவாக்கம் பகுதியில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் சிறுவனைத் தாக்கியுள்ளனர். பயந்துபோன அந்தச் சிறுவன் 16 வயது சிறுமியை மட்டும் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, காயமடைந்த 14 வயது சிறுமி மட்டும் அங்கு தனியாகச் சிக்கிக்கொண்டார். அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள், அத்திவாக்கம் ஏரிப் பகுதியில் வைத்து இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை ஆய்வு செய்ததில், ஆவடி அருகே பதுங்கி இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலாஜி (என்கிற காக்கா பாலாஜி) கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் ‘ஏ’ பிரிவு ரவுடியாக வலம் வந்ததும் தெரியவந்தது.
பாலாஜி அளித்த தகவலின் பேரில், இந்தக் கொடூரச் செயலில் அவருக்குத் துணையாக இருந்த மாரிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தாமோதர பெருமாள் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்மையில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பாலாஜி, மீண்டும் இதுபோன்ற ஒரு மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், புதிய தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல்…
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியாத சூழலில், தவெக தலைவர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதித்துவிட்டார்…
கொளத்தூர் தொகுதி பிரதிநிதி வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட போதிலும்,…