வல்லவன் படத்தில் என்னை நம்ப வைத்து ஏமாத்திட்டாங்க.. பல வருட உண்மையை உளறிய நடிகை சந்தியா..!

By Nanthini on மார்ச் 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அதன்படி பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நடித்த சந்தியாவை யாரும் மறந்திருக்க முடியாது. முதல் திரைப்படமே இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சந்தியா நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் அளவுக்கு எந்த திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துக் கொண்டிருந்த சந்தியா சென்னையில் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவரை குருவாயூர் கோயிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Kadhal Sandhya- Family Stills - Suryan FM

   

2016ஆம் ஆண்டு இவர்களுடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் அப்போது வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டிருந்ததால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு சந்தியா கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தியா துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தியா நடித்திருந்தார்.

   

பிகினி உடையில் நடிகை காதல் சந்தியா - புகைப்படத்தை பார்த்து சூட்டை தணிக்கும்  ரசிகர்கள். | tamil360newz

 

தற்போது அவரது படங்களில் பார்ப்பது என்பது அரிதாகத்தான் உள்ளது. இப்படியான நிலையில் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தில் சந்தியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 26 ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்த திரைப்படம் தான் வல்லவன். இதில் நயன்தாரா, ரீமா சென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வல்லவன் கதையையே நயன்தாராவுக்காக மாத்துனாரா சிம்பு?.. காதல் சந்தியா இப்படி  போட்டு உடைச்சிருக்காங்களே! | Throwback: Kadhal Sandhya reveals Simbu  totally changed ...

இந்நிலையில் வல்லவன் திரைப்படம் குறித்து சந்தியா சமீபத்தில் அளித்த பேட்டியில் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார். அதில், வல்லவன் படத்தில் நடிப்பதற்காக அவர்கள் என்கிட்ட சொன்ன கதையே வேறு. வீட்டில் வந்து அவர்கள் சொன்ன கதை வேறு மாதிரி இருந்தது. ஆனால் அந்த கதை அப்படியே படப்பிடிப்புக்கு செல்லும்போது மாறியது. பிறகு படம் ரிலீஸ் ஆகும் போது கம்ப்ளிட்டா வேறு மாதிரி கதையில் ரிலீஸ் ஆச்சு. வல்லவன் கதை என்கிட்ட சொன்னத சொன்னா நீங்க அது வேறு படத்தோட கதை மாதிரி இருக்கு என்று சொல்லுவீங்க என்று சந்தியா வல்லவன் படத்தில் நடித்த ஒத்துக்கொண்ட கதை வேறு நடித்த கதை வேறு என்று பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்