வாலு படத்தில் ஒரு சீனுக்கு வந்தாலும் நச்சுன்னு நடித்த அர்ச்சனா மாரியப்பன் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்..!

By Nanthini on பங்குனி 15, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையில் வாணி ராணி, அழகு, அழகி மற்றும் வள்ளி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அர்ச்சனா மாரியப்பன். இவர் சீரியலை தவிர்த்து சினிமாவிலும் ஒரு சில படங்களில் அடிக்கடி நடித்து வருகின்றார். அதன்படி சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனைப் போலவே விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வெள்ளைக்காரத்துரை மற்றும் சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்காய் போன்ற பல திரைப்படங்களில் அர்ச்சனா மாரியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மகன் கேட்ட கேள்வி! அந்தப் படத்தில் நடித்தது நினைத்து வெட்கப்படுகிறேன்!" நடிகை அர்ச்சனா வேதனை! - Tamil Spark

   

அர்ச்சனா ஹாரிஸ் என்ற அர்ச்சனா மாரியப்பன் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படங்களை தவிர கலகலப்பு, சிம்பு நடித்த வாலு மற்றும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களை ஏற்று இவர் நடித்துள்ளார்.

   

 

பெரும்பாலும் தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இதுவரை இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். மறுபக்கம் இதுவரை இவர் 15 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானது தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் தான்.

தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறை என இரண்டிலும் பணியாற்றி வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் நடித்த முதல் படத்தில் அங்கயர் கன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அர்ச்சனா பொன்மகள் வந்தால் தொடரில் மூத்த மருமகளாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொன்னூஞ்சல், வாணி ராணி மற்றும் அழகு என விஜய் டிவி மற்றும் சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் புவனா கதாபாத்திரத்தில் இவர் நடித்த ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும்.

இவர் படத்தில் நடித்த காட்சிகள் மட்டும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வர தொடங்கியது. சீரியல்கள் மூலமாக இல்லத்தரசிகள் மத்தியிலும் பிரபலமானார். இந்நிலையில் அர்ச்சனா மாரியப்பன் கிளாமரான உடையில் ஹோலி கொண்டாடிய அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.