40 வருடங்களுக்குப் பிறகு… பிரபல ஹீரோவின் படத்தில் எண்ட்ரி கொடுக்கும் காதல் ஓவியம் பட ஹீரோ..!

By Nanthini on பிப்ரவரி 13, 2025

Spread the love

கடந்த 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் காதல் ஓவியம். உணர்ச்சிபூர்வமான காதல் கதைகளைக் கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ராதாரவி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் கண்ணன்.

காதல் ஓவியம் பட ஹீரோவை நினைவு இருக்கா! விஜய் படத்தில் பல வருடங்களுக்கு பின் என்ட்ரி | Kadhal Oviyam Actor Kannan Re Entry In New Movie

   

இந்த திரைப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்குப் பிறகு அவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா பக்கமே வராத கண்ணன் தற்போது விஜய் ஆண்டனி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

   

காதல் ஓவியம் பட ஹீரோவை நினைவு இருக்கா! விஜய் படத்தில் பல வருடங்களுக்கு பின் என்ட்ரி | Kadhal Oviyam Actor Kannan Re Entry In New Movie

 

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற கோடையில் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விஜய் ஆண்டனி 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.