உலகில் எந்த ஒரு தீங்கான விஷயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று தெரிந்தால் உடனே அந்த பொருளை தடை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு சிலவற்றிற்கு அரசே நடவடிக்கை எடுக்கும். அதுபோல அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகளில் Crocs எனப்படும் காலணிகளுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
அமெரிக்கா முழுவதும் அமைந்திருக்கும் பள்ளிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகள் Crocs காலணிகள் அணிவதை தடை செய்து வருகின்றது. அமெரிக்காவில் உள்ள அலபாமா, ஜார்ஜியா ஃப்ளோரிடா ஆகிய நகரங்களில் இருக்கும் பள்ளிகளில் தற்போது நடவடிக்கையை துரிதமாக எடுத்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த Crocs காலணிகளுக்கு தடை விதிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தடையை மீறி Crocs அணிந்து வரும் மாணவர்களுக்கு தண்டனைகளையும் பள்ளிகள் கொடுத்து வருகிறார்கள். இந்த Crocs காலனிகளை அணிவதால் மாணவர்களுக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள்.
Crocs காலணிகளில் பின்னால் பட்டை போன்ற பிடிப்பு இல்லை என்பதால் மாணவர்கள் தடுக்கி கீழே விழுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வண்ண வயமான Crocs ஆனது வசீகரிக்கும் படங்கள் மற்றும் நிறங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் வகுப்பறையில் கவனசிதறல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதற்காகவும் Crocs காலணிகளுக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.