#image_title
காதல் திரைப்படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்திருந்த நடிகை சரண்யா முருகன் கோயிலுக்கு மொட்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் காதல் சந்தியா. இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதேபோல நடிகர் பரத்தும் இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய நடிகராக வலம் வந்தார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர்தான் தயாரித்திருந்தார். இப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையை பலரும் மறந்திருக்க முடியாது. அவருடைய பெயர் சரண்யா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த இவர் காதல் திரைப்படத்தில் தான் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து துள்ளுற வயசு என்கின்ற படத்தில் நடித்தார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்து மேலும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இறுதியாக 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிறகு இவரை எந்த படத்திலும் காணவில்லை. சமீபத்தில் ஒரு ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருந்த இவர் அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகை காதல் சரண்யா திருத்தணி முருகன் கோயிலுக்கு மொட்டை போட்டு அழகு குத்தி பால்குடம் எடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…