தமிழக பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவரும், 2024-ம் ஆண்டு பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான கே. வசந்தராஜன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியில் இருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய தமிழக பாஜகவில் தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றக்கூடிய தகுந்த சூழல் இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கே. அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பாதையை நோக்கி நகர்வதாக வெளியாகி வரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், அவரது தீவிர ஆதரவாளரான வசந்தராஜனின் இந்த விலகல் மற்றும் புதிய இயக்கம் நோக்கிய ஆதரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [
