ஒரு கோழிக்கடையில் (Chicken Shop) திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் அரங்கேறிய நம்பமுடியாத ஒரு அறிவியல் அதிசயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு சவால் விடுக்கும் வகையில், கோழியின் 2 கால்கள் தரையைத் தொடாமல் காற்றில் மிதந்தவாறு இருந்த விசித்திரமான காட்சி காண்போரை அதிர வைத்துள்ளது.
அறிவியல் பூர்வமாகப் பார்க்கும்போது, பூமியில் இருக்கும் எந்தவொரு பொருளும் புவிஈர்ப்பு விசையின் காரணமாகத் தரையை நோக்கி ஈர்க்கப்படுவது இயல்பு. ஆனால், ஒரு பரபரப்பான கோழிக்கடையில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே எந்தவொரு பிடிப்பும் இன்றி, இரண்டு கால்கள் காற்றில் நிலையாக மிதந்து கொண்டிருந்த நிகழ்வு, அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை அப்படியே உறைந்து போகச் செய்தது.
அதாவது கடை உரிமையாளர் ஜாசிம் என்பவரின் கடையில் இருந்த ஒரு அபூர்வக் கோழிக்கு, சாதாரண கோழிகளைப் போல இரண்டு கால்கள் இல்லாமல், வியப்பூட்டும் வகையில் நான்கு கால்கள் இருந்துள்ளன. இந்த விசித்திரமான உடலமைப்பைக் கண்டு நிலைகுலைந்து போன உரிமையாளர் ஜாசிம், ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
அந்தக் கோழியின் உடலமைப்பை உன்னிப்பாகக் கவனித்தபோது, அதன் முன்னால் இருக்கும் இரண்டு கால்களும் சாதாரண கோழிகளைப் போல நல்ல நீளமாகவும் பலமாகவும் காணப்பட்டுள்ளன. ஆனால், அதன் பின்புறத்தில் மேலும் இரண்டு கால்கள் தனியாக முளைத்திருந்தன. அளவில் சற்று சிறியதாகக் காட்சியளித்த அந்தப் பின் கால்கள் இரண்டும், கோழி தரையில் கேஷுவலாக நடந்து செல்லும்போது தரையைத் தொடவே இல்லையாம். முன்னால் இருக்கும் இரண்டு நீளமான கால்களை மட்டுமே பயன்படுத்தி அந்த கோழி சாதாரணமாக உலா வருவதுதான் அந்த ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
