நடுங்க வைத்த பலத்த சத்தம்… ஊழியர்கள் உள்ளே இருக்கும்போதே சரிந்து விழுந்த போயிங் 787 விமானம்… உலகை உலுக்கிய திகில் வீடியோ..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் (Frankfurt Airport) நிறுத்தப்பட்டிருந்த லுஃப்தான்சா (Lufthansa) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் (Boeing 787-9 Dreamliner) விமானத்தின் முன்பக்கச் சக்கரப் பகுதி (Nose gear) திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அதிரடி விபத்தின்போது விமானத்தின் முன்பகுதி பலத்த சத்தத்துடன் தரையில் மோதி சரிந்தது. இந்தத் திடுக்கிடும் காட்சியைக் காட்டும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

விபத்து நடந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாரும் இன்னும் விமானத்திற்குள் ஏறவில்லை. ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த அந்த விமானத்திற்குள் பணியாளர்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்தத் திடீர் விபத்தின் காரணமாக விமானத்தில் இருந்த ஊழியர்கள் சிலர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தைத் தொடர்ந்து, அந்தப் குறிப்பிட்ட விமானச் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

   

விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் கடந்த ஆண்டுதான் தயாரிக்கப்பட்டு, மிக அண்மையில்தான் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதத் தவறா என்பது குறித்து லுஃப்தான்சா நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் நின்றுகொண்டிருந்த போதே அதன் முன்பக்கச் சக்கரம் திடீரெனச் சுருங்கி விழுந்தது எப்படி என்பது குறித்துப் பலரும் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.