விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு புது வசந்தம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தை ஆர்.பி சவுத்ரி மற்றும் ஆர்.மோகன் இணைந்து தயாரித்தனர். எஸ்.ஏ ராஜ்குமார் புது வசந்தம் படத்திற்கு இசை அமைத்தார்.

புது வசந்தம் படத்தில் கே.எஸ் ரவிக்குமார், விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர். நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இடையே கள்ள கபடம் இல்லாத நட்பு, நேசம் இருப்பதை இந்த படம் மூலம் இயக்குனர் கூறியிருக்கிறார். கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக ஆணி அடித்தது போல நட்பின் புனிதத்தை கூறியது தான் புதுவசந்தம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சமீபத்தில் கே.எஸ் ரவிக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, புது வசந்தம் படத்தின் கதையை கேட்டு நான் ஆடிப் போயிட்டேன். அது எப்போதும் எடுக்குற மாதிரி கதையே இல்ல. கொஞ்சம் வித்தியாசமான படம். அதுவரைக்கும் மசாலா படங்களில் வொர்க் பண்ணிட்டு 4 பசங்க ஒரு பொண்ணு அப்படின்னு இந்த கதை வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் ஒரு சில ஆலோசனைகள் சொன்னேன்.

இயக்குனரும் அந்த ஆலோசனைகளை மனதில் வச்சுக்கிட்டு வேற மாதிரி கிளைமாக்ஸ் பண்ணினாரு. 4 பசங்களோட அந்த பொண்ணு போறத ஒரு ஆடியன்ஸா என்னால இருந்து பார்க்க முடியல. சுரேஷ் நல்ல பையன். இதனால அவன வெறுக்கிற மாதிரி சில சீன் எடுத்தாங்க. எங்க அக்கா ஹஸ்பண்ட் மாமா டாக்டர். அவரோட கிளினிக்கில் வைத்து ஒரு சில காட்சிகளை எடுத்தோம் என கூறியுள்ளார்.
