திமிரு படத்துல வினாயகன் ரோல்ல நடிக்க இருந்தது இவர்தான் … ஆனா வடிவேலு இருந்ததால நடக்கல –தருண் கோபி பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆனி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் படத்தை ஹிட்டாக கொடுப்பது ஒரு இயக்குனருக்கு மிகவும் முக்கியம். அப்படி ஹிட் கொடுத்துவிட்டால் அதன் பின்னர் அவருக்கான வாய்ப்புகள் அமையும். அப்படி திமிரு படம் மூலமாக அறிமுகமானவர்தான் இயக்குனர் தருண் கோபி.

அதன் பிறகு சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரியளவில் ஓடவில்லை. அதன் பின்னர் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர் தான் இயக்குனர் தருண் கோபி. அதன் பின்னர் அவர் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். மாயாண்டி குடும்பத்தார் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

   

இவர் இயக்கிய திமிரு திரைப்படம்தான் இப்போது முன்னணி நடிகராக இருக்கும் வினாயகத்துக்கு அடையாளம் கொடுத்த ஒரு படமாக அமைந்தது. அந்த படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தோடு அல்லக்கையாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருப்பார் வினாயகன். அதன் பின்னர் அவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகி, இப்போது ரஜினிக்கே வில்லனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

   

இந்நிலையில் இந்த கதாபாத்திரம் பற்றி தருண் கோபி பேசியுள்ளார். அதில் “முதலில் இந்த கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்புவைதான் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவர் ‘வடிவேலு அண்ணன் இருக்குற படத்துல நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பின்னர்தான் வினாயகனைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தேன். அவர் முதலில் நடிக்க மறுத்தார். நான்தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்.

 

அதன் பின்னர் காளை படத்திலும் அவருக்கு ஒரு வேடம் தந்தேன். ஆனால் அதன்பிறகு நானே நடிக்க ஆரம்பித்ததால் அவரோடு நட்பு முறிந்தது. அவருடன் பேசியே பல ஆண்டுகள் இருக்கும். இப்போது அவர் முன்னணி நடிகராக இருப்பது மகிழ்ச்சி” எனப் பேசியுள்ளார்.