“தோனியின் சாதனையை முறியடிப்பதே என் லட்சியம்… 5 கோப்பைகள் தான் டார்கெட்!”… ஐபிஎல் களத்தில் அதிரடி கிளப்பும் கே.எல். ராகுல்…!!!

By Muthu Mani on வைகாசி 1, 2026

Spread the love

2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை முந்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், தனிப்பட்ட சாதனைகள் தான் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தினாலும், தோனியின் ரன்களைத் தான் கடந்துவிட்டதாக முழுமையாக உணரவில்லை என்று அடக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள அவர், கிரிக்கெட் என்பது ஒரு கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளார். எம்.எஸ். தோனி வென்றதைப் போல பல கோப்பைகளை வெல்வதே தனக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றும், வெற்றிகரமான அணியில் இடம்பெற்று டிராபிகளை வெல்வதே தனது முதன்மையான இலக்கு என்றும் கே.எல். ராகுல் உருக்கமாகக் கூறியுள்ளார்.