பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள பகீர் சம்பவம் நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யதேந்திரா மற்றும் தனு ஆகிய இருவரும் காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தனு கோபித்துக் கொண்டு தனது தந்தை மகேந்திர பாலின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனுவின் பிறந்தநாள் வந்தபோது, மனைவியைச் சமாதானப்படுத்தவும் பிறந்தநாளைக் கொண்டாடவும் யதேந்திரா தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த மருமகனை மாமனார் மகேந்திர பால் இன்முகத்தோடு வரவேற்றுள்ளார். அனைவரும் சேர்ந்து பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு, மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார் மாமனார். இந்தச் சம்பவத்தில் மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

   

யதேந்திராவின் மர்ம மரணம் குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் உடற்கூறாய்வு செய்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது வந்துள்ள தடய அறிவியல் (FSL) ஆய்வறிக்கையில், யதேந்திரா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனு மற்றும் அவரது தந்தை மகேந்திர பால் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டமே ஒரு மனிதனின் மரணப் பொறியாக மாறியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.