என்னடா இது..? 5.3 லிட்டர் டேங்கில் 6 லிட்டர் பெட்ரோலா..? பெட்ரோல் பங்கில் அம்பலமான பகீர் மோசடி… ஊழியரை ஓட ஓட விட்ட இளம்பெண்..!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது ஆக்டிவா (Activa) இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்துள்ளார். ஊழியரிடம் “டேங்க் முழுவதையும் நிரப்புங்கள்” என்று அமைதியாகக் கூறிவிட்டு கவனித்துள்ளார். பெட்ரோல் நிரப்பப்பட்ட பின், மீட்டரில் 6 லிட்டர் என்று காட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், ஆக்டிவா வாகனத்தின் மொத்தக் கொள்ளளவே 5.3 லிட்டர்தான் எனும் போது, மீட்டரில் 6 லிட்டர் காட்டியது பெரும் மோசடியை உணர்த்தியது.

உடனடியாக அந்தப் பெண் ஊழியரைத் தட்டிக்கேட்டார். “எனது வாகனத்தின் டேங்க் கொள்ளளவே 5.3 லிட்டர்தான், அதிலும் ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் இருந்தது. அப்படியிருக்க எப்படி நீங்கள் 6 லிட்டர் பிடிக்க முடியும்?” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் பதற்றமடைந்த ஊழியர், முறையான பதில் சொல்லாமல் அந்தப் பெண்ணிடம் மிகவும் மாரியாதைக் குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார். ஆனால், அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல் உடனடியாக மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

   

புகாரைத் தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெட்ரோல் அளவு சரிபார்க்கப்பட்டது. விசாரணையில் அந்த பெட்ரோல் பங்கில் ரகசியமாக மோசடி நடப்பது ஊர்ஜிதமானது. இதன் விளைவாக, மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும், அந்த பெட்ரோல் பங்கிற்கு 15 நாட்கள் சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். விழிப்புணர்வுடன் இருந்த அந்தப் பெண்ணின் செயலால் ஒரு பெரிய பெட்ரோல் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.