#image_title
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.
இந்நிலையில் அபூர்வ ராகங்கள் படத்திற்காக ரஜினியை பாலச்சந்தர் தேர்வு செய்த போது இரண்டே இரண்டு அறிவுரைகளை மட்டும் வழங்கினாராம். அதில் “நீ வேகமா பேசுறது , ஸ்டைலா நடக்குறது எல்லாமே எனக்குப் புடிச்சுருக்கு. ஆனா உன்னோட தமிழ் சுத்தமா நல்லா இல்ல. அதனால சீக்கிரமா தமிழ் கத்துக்கோ” என சொன்னாராம்.
இன்னொன்று எதாவது நடித்துக் காட்டுகிறேன் என சொல்லி ரஜினி, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசனின் வசனத்தைப் பேசிக் காட்டியபோது ‘நீ ஏன் சிவாஜி மாதிரி நடிக்குற. நீ உன்ன மாதிரி நடி… அது உன்ன நல்ல நடிகனாக மாத்தும்” என சொன்னாராம். இதை இரண்டையும் அப்படியே கப்பென்று பிடித்துக் கொண்ட ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தில் இரண்டையும் வெளிக்காட்ட தன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…