சற்றுமுன் அதிர்ச்சி… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய ஆயில் ஃபேக்டரி…. சென்னையை உலுக்கிய பரபரப்பு காட்சி…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரெனப் பிடித்த தீ, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயில் பேரல்களுக்குப் பரவியதால், அவை பயங்கர சத்தத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறின.

இதனால் ஆலை முழுவதும் கரும்புகையும் தீப்பொறிகளும் சூழ்ந்து கொண்டதைக் கண்டு, உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காக்க வெளியில் ஓடி வந்தனர். இச்சம்பவம் குறித்து உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் ராட்சத தீயைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

   

#WATCH | Fire Accident | சென்னை மணலி அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை#manali #fireaccident #News18TamilNadu pic.twitter.com/jbNBfM7rUo— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 25, 2026