விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்த நிலையில், காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெறும் 20 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 75 நாள்களுக்குள் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிக விரைவாக நீதி கிடைத்துள்ளதோடு, குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மின்னல் வேக நீதிமன்ற தீர்ப்பை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பரவலாக பாராட்டி, பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
