டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவ்வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி மோகனா அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் தான் முன்பே வழக்கறிஞராக ஆஜராகி வாதாடியுள்ளதால், அறநெறி மற்றும் நடுநிலைமை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிபதி மோகனாவின் இந்த விலகலைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
