திடீரென பெங்களூரு பறக்கும் விஜய்…. கூடவே செல்லும் 13 பேர் கொண்ட பவர்ஃபுல் டீம்…. லிஸ்டில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி… இந்த டுவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாததால், தமிழ்நாட்டின் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மீறி, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்து பிடிவாதம் காட்டி வரும் சூழலில், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இந்தப் பயணத்திற்காக முதல்வருடன் 13 பேர் கொண்ட உயர்மட்டக் குழு பயணிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோருடன் தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு, அட்வகேட் ஜெனரல், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் மற்றும் முதல்வரின் சிறப்பு ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக சட்டசபை வளாகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை அந்நாட்டின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உறுதி செய்துள்ள போதிலும், தமிழக அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

   

அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது மீண்டும் கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது சரியா என முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாலேயே நீதிமன்றம் மூலம் உரிமை பெறப்பட்டதைச் சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்கள், இந்த கர்நாடகப் பயணத்தைக் கைவிடுமாறு வலியுறுத்துகின்றனர். இருப்பினும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கிட்டத்தட்ட உறுதியாகத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.