பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர்ஜாய் கிரிசில்டா இன்று மீண்டும் ஒரு புதிய புகாரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிணையில் வெளிவர முடியாத (Non-bailable) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது குழந்தைகளைப் பராமரிக்கவும், மருத்துவச் செலவுகளுக்காகவும் பணம் தேவைப்படுவதாக அவர் இந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, மாதம் ₹6.5 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்கக் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
