சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலில், ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனத்தின் பெயரையும் சமூக வலைதளப் பதிவுகளில் ஜாய் இணைத்திருந்தார். இதனால் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு நிதி இழப்பு உண்டாகியுள்ளதாகக் கூறி, அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை இணைத்துப் போடப்பட்ட பதிவுகள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார். அதேசமயம், ரங்கராஜுக்கும் ஜாய்க்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்க ஒரு மத்தியஸ்தரை நியமிக்க இரு தரப்பும் பெயர்களைப் பரிந்துரைக்க உத்தரவிட்டார். மேலும், ரங்கராஜ் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதன் மூலம் நிறுவனத்தின் பெயரை அவதூறு பதிவுகளில் இருந்து நீக்க ஜாய் ஒப்புக்கொண்டதால் ஒரு பகுதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
