“வெனிசுலா பெட்ரோல் எங்களுக்குத்தான்…” டிரம்ப் அறிவிப்பால் டென்ஷனான ரஷ்யா… உலக அளவில் நீடிக்கும் பதற்றம்…!!

By Devi Ramu on தை 14, 2026

Spread the love

வெனிசுலாவில் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டைத் தாங்களே ஆளப்போவதாகவும் அங்கிருக்கும் எண்ணெய் வளங்கள் அனைத்தும் தங்களுக்குச் சொந்தம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள வெனிசுலாவைக் கைப்பற்றுவதன் மூலம், சர்வதேச எரிசக்தி சந்தையில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா ஒரு நிர்வாக ஆணையைப் பிறப்பித்து, வெனிசுலாவின் எண்ணெய் வருவாய் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை ரஷ்யா வன்மையாக எதிர்ப்பதுடன், வெனிசுலாவில் ரஷ்ய அரசு நிறுவனமான ‘ரோஸ்ஜருபெஷ்நெஃப்ட்’  முதலீடு செய்துள்ள அனைத்து எண்ணெய் சொத்துக்களும் ரஷ்யாவிற்கே சொந்தம் என்று உரிமை கோரியுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி தாங்கள் வாங்கிய சொத்துக்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயல்வதும், அதற்கு ரஷ்யா முட்டுக்கட்டை போடுவதும் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.