பாகிஸ்தானில் கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்துக் கொண்டு நேரலை செய்த பத்திரிக்கையாளர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பல மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதில் வெள்ளம் காரணமாக இரவல்பிண்டியில் உள்ள சஹான் அணை உடைந்து இருப்பதால் அங்குள்ள பகுதிகள் மூழ்கின. இப்படியான நிலையில் அங்கு பத்திரிக்கையாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக் பிடித்துக் கொண்டு நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…