ஜோக்கர் பட இயக்குனரின் மனைவிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துன்புறுத்தல்.. பரபரப்பு புகார்..!

By Nanthini on பங்குனி 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் ராஜு முருகன் . இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சசிகுமாரை வைத்து தற்போது படம் இயக்கி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஹேமா சின்ஹா என்ற மனைவியும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இப்படியான நிலையில் ராஜூ முருகன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகின்றார். சென்னை ஐயப்பன் தாங்கலை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பமாக வசித்து வரும் நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 2000க்கும் அதிகமான வீடுகள் உள்ளது.

   

இங்கு திரை பிரபலங்கள் பலரும் இந்த குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இதனிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக ராஜு முருகனின் மனைவி ஹேமா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்து பாலியல் ரீதியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கண்டு கொள்ளாததால் இது தொடர்பாக புகார் அளித்த ராஜூ முருகனின் மனைவி ஏமாவுக்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.

   

 

இது தொடர்பாக ராஜு முருகனின் மனைவி ஹேமா சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் சினிமா பிரபலங்கள் பலரும் வசித்து வருகிறார்கள். இதனால் கட்டுப்பாடுகள் உள்ளது. இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு தொகை வசூலிக்கப்படும் நிலையில் முன்கூட்டியே பராமரிப்பு தொகையை அளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை 22,000 பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட எங்களின் வீட்டை பராமரிக்க தவறுகிறார்கள். இது குறித்து கேள்வி கேட்டால் மன உளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலியல் ரீதியிலும் துன்புறுத்தலும் நடைபெறுகிறது. போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காத படி தடுக்கிறார்கள் என்று ஹேமா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.