யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… திமுக கூட்டணியில் இணையும் பிரபல கட்சி?… செம குஷியில் முதல்வர் ஸ்டாலின்…!

By Nanthini on ஆவணி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி மாறி மாறி கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வர முக்கிய பிரபலங்களும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் கட்சியினர் விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  இதனிடையே கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸ் ஆகவே ராமதாஸ் வைத்துள்ளார். ஆனால் அவர் திமுக கூட்டணியில் இணைய தீவிரமாக பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ரகசிய சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. வட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். சீட் பேரம் இறுதியான பிறகு கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.