தேதி குறிச்சாச்சு… அதிமுகவின் முக்கிய தலையை தட்டி தூக்கிய செங்கோட்டையன்… வெளியான டாப் சீக்ரெட்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.

இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இவர் சேர்ந்த பிறகு தான் நாஞ்சில் சம்பத் மற்றும் சில அதிமுகவின் முக்கிய முகங்கள் விஜய் கட்சியில் இணைந்தனர். இதனால் இவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்க்கும் பணியை செங்கோட்டையன் தற்போது தீவிர படுத்தியுள்ளார்.

   

அதன்படி ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கத்தை தவெகவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஓபிஎஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும் அரசியலில் அவருடைய பணி குறைந்து கொண்டே செல்கிறது என்பதாலும் இதனை சரிகட்ட அவர் விஜய் கட்சியில் இணைய சம்மதித்து விட்டார் என பலரும் கூறினர். இந்நிலையில் அவர் விஜய் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானதாக தகவல் கிடைத்துள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி நடக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வைத்தியலிங்கம் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.