காலையிலேயே பரபரப்பு… தவெகவின் டாப் தலையை சந்தித்த அதிமுக அமைச்சர்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.

இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இவர் சேர்ந்த பிறகு தான் நாஞ்சில் சம்பத் மற்றும் சில அதிமுகவின் முக்கிய முகங்கள் விஜய் கட்சியில் இணைந்தனர். இதனால் இவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்க்கும் பணியை செங்கோட்டையன் தற்போது தீவிர படுத்தியுள்ளார்.

   

இந்நிலையில் சில காலமாகவே இபிஎஸ்யின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ராஜ்மோகனை சந்தித்துள்ளார். இது மரியாதையை நிமித்தமான சந்திப்பாக தெரியவில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

   

ஏனென்றால் அதிருப்தி அமைச்சர்களை ஒன்று சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் கூறியதால் இது கட்சியில் இணைவதற்கான சந்திப்புதான் என யூகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்து வருவது இபிஎஸ்ஸுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.